sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா

/

கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா

கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா

கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா


ADDED : மே 09, 2024 06:11 AM

Google News

ADDED : மே 09, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், 4ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது.

அன்று காலை, 5:00 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சியும், 7:00 மணிக்கு, மாவட்ட சிவனடியார் திருக்கூட்டத்தினர் கொடியேற்றமும், பிற்பகல், 2:00 மணிக்கு, அடியார்களின் அருள் வாழ்வு என்ற பொருளில் சொற்பொழிவும், மாலை, கந்திகுப்பம் சொர்ணபைரவர் திருமடத்திலிருந்து திருமுறை நுால்களுடன் அடியார்கள் ஊர்வலம், கூட்டு வழிபாடு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.

நேற்று காலை, 5:00 மணிக்கு, சிவபூஜை, பசு வழிபாடு, அம்மையப்பர் வேள்வி, காலை, 11:30 மணிக்கு, பெரிய புராணத்தில் நம்பிரான் சிறுத்தொண்ட நாயனார் புராணம் பாராயணம் விளக்கவுரையும், மகேஸ்வர பூஜையையும் பைரவ சுவாமிகள் நடத்தினார். மாலை, 3:00 மணிக்கு, 'சமய ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும்' என்ற தலைப்பில் சொற்பொழிவும், மாலை, 6:00 மணிக்கு, கூட்டு வழிபாடு, பெரியோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us