/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : செப் 03, 2025 01:22 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், இறையமுது தயாரிக்கும் பணியாளர்கள், அன்னதானம் தயாரிக்கும் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் பணியாளர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமுவேல் ஆகியோர் தலைமையில் இப்பயிற்சி நடந்தது.
இதில், மாவட்டத்திலுள்ள கோவில்களில் பூஜை செய்து வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் அன்னதான பணியாளர்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.