/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
/
சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஜூலை 13, 2025 01:19 AM
ஓசூர், ஓசூர், வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டம் சார்பில், முத்தாலி கிராமத்தில், 40 விவசயிகளுக்கு சிறுதானிய சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் செய்வதின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். அதியமான் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் பாக்கியலட்சுமி, ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள், விதை நேர்த்தி செய்வதின் முக்கியத்துவம், மண் மாதிரி சேகரிக்கும் தொழில்நுட்பம், மண்வள மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
ஓசூர் வேளாண் அலுவலர் தென்றல், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் பயன்படுத்துவதின் அவசியம், சொட்டு நீர் பாசன பயன்கள் பற்றியும், உதவி வேளாண் அலுவலர் ஆறுமுகம்,
துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் காவியா செய்திருந்தார்.