/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'புகையில்லா போகி' விழிப்புணர்வு
/
'புகையில்லா போகி' விழிப்புணர்வு
ADDED : ஜன 13, 2026 06:11 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாசுக்-கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், போகி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புகை-யில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்தும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, 'மீண்டும் மஞ்சப்பை' பயன்படுத்துவது பற்றியும், மாணவ,
மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குறைத்தல், மறு பயன்-பாடு, மறுசுழற்சி செய்தல் என்ற தலைப்பில், திட்ட மாதிரிகள் உருவாக்குதல், வரைபடங்கள் வரைதல் நடந்தது. இவற்றை, மாவட்ட சுற்றுச்-சூழல் பொறியாளர் முத்துராஜ் பார்வையிட்டார். முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலை-மையாசிரியை வளர்மதி உட்பட பலர் பங்கேற்-றனர்.

