ADDED : ஜூலை 04, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
அஞ்செட்டி; கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சக்-கலப்பள்ளி கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்குகிறது.
இங்கு, 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். முத்தம்மாள், 54, என்பவர் சத்துணவு பணியாள-ராக, 30 ஆண்டுகளாக பணிபுரிகிறார்; நேற்று வழக்கம் போல் மாணவர்களுக்கு உணவு சமைத்தார். சத்துணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்காக, அவற்றை வேக வைக்க, பள்ளி வளாகத்தில் இருந்த விறகுகளை முத்தம்மாள் எடுத்துள்ளார்.அப்போது, விறகிற்கு அடியில் பதுங்கியிருந்த குட்டி நாகப்பாம்பு, அவரை தீண்டியது. முத்-தம்மாள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஆசிரி-யர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
