ADDED : ஏப் 01, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அடுத்த ஒட்டூரை சேர்ந்தவர் முனிராஜ், 27. ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 9ல், விடுமுறையில் அவர் ஊருக்கு வந்தார்.
கடந்த, 29 மாலை அவர் பனை மரத்தில் ஏறியபோது தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்தவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
