UPDATED : அக் 21, 2026 10:37 PM
ADDED : அக் 21, 2026 09:29 PM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ரயில் மோதி ராணுவ வீரர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஏ.வெள்ளாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 40. இந்திய ராணுவத்தில், மத்தியப்பிரதேசத்தில் பணியாற்றி வந்தார். இவர் மனைவி மோனிகா. இவர்களுக்கு, 11 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர்.
மகேந்திரன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இன்று காலை, 10:30 மணியளவில் தன் நண்பரை சந்திக்க, சாமல்பட்டிக்கு சென்றவர், மேல்சாமல்பட்டியிலுள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது அந்த வழியாக, சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் ரயில்வே போலீசார் அவரின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
