/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திடக்குப்பை மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
திடக்குப்பை மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 05, 2025 01:25 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், திடக்குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியரிடையே நிலையான குப்பை அகற்றும் முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தார். சி.எம்.சி.ஏ., அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பவானி ரமேஷ், மாணவ, மாணவியருக்கு, குப்பையை பிரித்தல், உரமிடல் மற்றும் மறுசுழற்சி குறித்து விளக்கி கூறினார்.ஆங்கில விரிவுரையாளர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தினேஷ் பாபு, சுத்தமான மற்றும் பசுமையான வளாகத்தை பேணுவதில் மாணவர்களின் பங்கை குறிப்பிட்டார். மூன்றாமாண்டு மாணவர் அஜித் நன்றி கூறினார்.