ADDED : செப் 19, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயா, 40, கூலித்தொழிலாளி. இவரது மகன் மனோ, 22, என்பவர் வேலைக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் கேட்ட ஜெயாவை, தாய் என்றும் பாராமல் மனோ சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயா அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், மனோவை கைது செய்தனர்.