/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம் மாணவர்களுக்கான சிறப்பு முகாம்
/
தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம் மாணவர்களுக்கான சிறப்பு முகாம்
தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம் மாணவர்களுக்கான சிறப்பு முகாம்
தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டம் மாணவர்களுக்கான சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 12, 2025 12:59 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் பயனடைய உள்ள, முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கான சிறப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் அனுராதா தலைமை வகித்து பேசினார். மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி பங்கேற்று, திட்டம் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தை திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்தார். சமூக நல அலுவலர் ஷர்லி, அரசு திட்டங்களில் பயனடையும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
கிருஷ்ணகிரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் சேதுராமலிங்கம், புதிய பயனாளர்களாகிய முதலாமாண்டு மாணவ, மாணவியருகு வங்கி கணக்கு துவக்கம் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை புதுமை பெண் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, தமிழ் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சகாய லியோன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.