/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
/
இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
ADDED : ஏப் 27, 2025 03:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு விண்ணப்-பிக்க வரும், மே, 2-ம் தேதி, அனைத்து வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் வெளியிட்-டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியான நபர்களுக்கு, வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது. இதற்காக, வரும், மே, 2ல், (வெள்ளிக்கி-ழமை) காலை, 10:00 மணி முதல், 5:00 மணி வரை, தொடர்பு-டைய அலுவலகங்கள், ஆர்.ஐ., மற்றும் தாசில்தார் அலுவலங்-களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது நகல்களுடன் தொடர்புடைய அலுவ-லர்களிடம் மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரி-வித்துள்ளார்.

