/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழை பாதிப்பு கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
/
மழை பாதிப்பு கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 06, 2024 07:53 AM
கிருஷ்ணகிரி: 'பெஞ்சல்' புயலினால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடக்கும் சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 'பெஞ்சல்' புயலினால் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாவில் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது, வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பியதால், பெரும்பாலானோர் தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், 50 மருத்துவக் குழுக்களால் தினந்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று பயன்பெறலாம். அனைவரும் கட்டாயம் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.