/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
/
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, ஜன. 2-
ஆங்கில புத்தாண்டை
முன்னிட்டு, கிருஷ்ணகிரியில்,
பெங்களூரு சாலையில் உள்ள துாய
பாத்திமா அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., தேவாலயம், ஐ.இ.எல்.சி., ஆலயம் உள்ளிட்ட அனைத்து
கிறிஸ்தவ ஆலயங்களில், நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதில் கடந்த, 2024ல் இறைவன் செய்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆராதனை வழிபாடு ஆலய பங்குத் தந்தை இசையாஸ் மற்றும் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் ஆகியோரால் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
*பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, பி பள்ளிப்பட்டி, பொம்மிடி, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பி.பள்ளிப்பட்டி, புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த சிறப்பு திருப்பலி வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* தர்மபுரி மாவட்டத்தில், உள்ள, கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. இதில், 2025ம் ஆண்டை வரவேற்கும் வகையில், ஆர்.சி., - சி.எஸ்.ஐ., உள்ளிட்ட கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தர்மபுரி- -திருப்பத்துார் சாலையில் உள்ள, துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில், தர்மபுரி மறை மாவட்ட மூத்த குரு அருள்சாமி தலைமையில், முதன்மை குரு அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குதந்தை இயேசு பிரபாகரன், தொன்போஸ்கோ பள்ளி முதல்வர் தந்தை அருள் ரோசோரியோ ஆகியோர் திருப்பலியில் ஈடுபட்டனர்.

