/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : டிச 17, 2024 01:41 AM
கிருஷ்ணகிரி, டிச. 17-
மார்கழி மாதத்தில், ஓசோன் படலம், பூமிக்கு மிக அருகில் அதிகாலை, 4:30 மணியிலிருந்து, 6:30 மணி வரை இருக்கும். ஓசோனை சுவாசித்தால் உடல்நலனுக்கு நல்லது என்பதால், மார்கழி மாதத்தில் பெண்கள் காலையில் கோலம் போடவும், ஆண்கள் நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபடுவதும் வழக்கம்.
இத்தகைய சிறப்புமிக்க மார்கழி மாதம் நேற்று பிறந்ததையடுத்து, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். அதேபோல், கிருஷ்ணன் கோவில் தெரு நவநீத வேணுகோபால சுவாமி கோவில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெரு முத்துமாரியம்மன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், அக்ரஹாரம், சிவாஜி நகர் ருக்மணி சமேத பாண்டுரங்கர் கோவில், பவானி அம்மன் கோவில், டான்சி வளாகம் செல்வ விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், பழையபேட்டை கவீஸ்வரன் கோவில், நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குடும்பத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.