/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனச்சரகங்களுக்கு இடையே விளையாட்டு போட்டி
/
வனச்சரகங்களுக்கு இடையே விளையாட்டு போட்டி
ADDED : ஆக 03, 2025 12:52 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி என, 7 வனச்சரகங்கள் உள்ளன. வனச்சரக பகுதிகளில் இருந்து, யானைகள் கிராமங்களை நோக்கி படையெடுப்பதால், வனத்துறையினர் ஆண்டு முழுவதும் இரவு, பகலாக யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, வனத்துறையினர் மன அழுத்தத்தை குறைக்கவும், யானைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வனச்சரகங்களுக்கு இடையே, யானை கோப்பை - 2025 என்ற பெயரில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் நேற்று விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் துவக்கி வைத்தார். வாலிபால், கிரிக்கெட், இறகுப்பந்து, செஸ், கேரம் போட்டிகள் தனித்தனியாக நடந்தன.
இதில், 7 வனச்சரகம் மற்றும் ஓசூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இறுதியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஓசூர் வனக்கோட்ட தலைமையிட உதவி வன பாதுகாவலர் யஸ்வந்த் ஜெகதீஷ், உதவி வனபாதுகாவலர் ராஜமாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

