/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு விழா
/
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு விழா
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு விழா
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜன 09, 2025 08:01 AM
கிருஷ்ணகிரி: -கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'சூப்பர் நோவா -2025' என்ற தலைப்பில், விளை-யாட்டு விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி கல்விக் குழுமங்-களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். பள்ளி குழும இயக்குனர் விஜய-லட்சுமி, பள்ளி முதல்வர் மஞ்சுளா ஆகியோர் குத்துவிளக்கேற்-றினர்.
விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, வண்ண பலுான்களையும், வெள்ளை புறாக்களையும் பறக்க விட்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு, 100 மீ., 200 மீ., ரிலே, தடகள போட்டி, நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பதக்கங்கள் அணிவிக்கப்-பட்டன. பின்னர், 4 குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவாக, சாந்தி குழு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் சூழற்கோப்பையை பெற்றது. தனிநபர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரமோத் பெற்றார். இதில், மாணவ, மாண-வியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

