ADDED : ஜூலை 14, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பிராமண புரோகிதர் அர்ச்சகர் சங்கம் சார்பில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் லட்சுமி குபேர பூஜை ஆகியவை நேற்று நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கோ பூஜை, லட்சுமி குபேர பூஜை உள்ளிட்டவை நடந்தது.
பின், 11:45 மணிக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் ராமசந்திர சார்யலு குழுவினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். இதில், மாங்கல்ய தாரணம், மஹா மங்கள ஆர்த்தி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச சுவாமி நகர்வலம் நடந்தது.