/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் விளையாட்டு விழா
/
ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : மார் 17, 2024 02:49 AM
அரூர்;தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது. ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன் தலைமை வகித்தார். விழாவில், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர், விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசு, பதக்கங்களை வழங்கினர்.
விழாவில், பள்ளி முதல்வர்கள் வெற்றிவேல் செல்வம், சாரதி மகாலிங்கம், கல்வி இயக்குனர் ஜான்இருதயராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், திருப்பதி, தினேஷ்குமார், ராஜதுரை, புவனேஸ்வரி ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஸ்வரி மணிமேகலை, பிரவீணா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

