ADDED : டிச 28, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே அரசம்பட்டியை சேர்ந்-தவர் செந்தில்குமார், 52. கடந்த, 1993 ல் காவலராக பணியில் சேர்ந்த இவர், கடந்த, 2018 ல், எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றார்.
தேன்கனிக்கோட்டை காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தார். ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் எஸ்.எஸ்.ஐ., ஆக இருந்த செந்தில்குமார், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ-மனை புறகாவல் நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.
கடந்த, 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்-தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை தேன்கனிக்கோட்டை காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் உயி-ரிழந்தார். சக போலீசார் அவரது உடலுக்கு
அஞ்சலி செலுத்தினர்.

