/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பச்சிளம் குழந்தை உயிரை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி
/
பச்சிளம் குழந்தை உயிரை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி
பச்சிளம் குழந்தை உயிரை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி
பச்சிளம் குழந்தை உயிரை காப்பாற்றிய செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி
ADDED : நவ 28, 2024 01:02 AM
பச்சிளம் குழந்தை உயிரை காப்பாற்றிய
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி
ஓசூர், நவ. 28-
ஓசூரை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஆக.,14ல், 1 கிலோ எடையுடன், 8 மாத குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் குடல் பகுதியில் கிருமி தொற்று ஏற்பட்டு ஓட்டை விழுந்ததால், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர்.
குழந்தை இயற்கை உபாதை கழிக்கும் போது, அது வழக்கமான வழியாக வெளியேறாமல் வயிற்று பகுதியில் தேங்கியது. அதனால் வயிற்றில் துளையிட்டு, குடல் பகுதியை வெளியே எடுத்து, நேரடியாக இயற்கை உபாதையை வெளியே செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். குழந்தைக்கு செரிமான பிரச்னை இருந்ததால், தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், குழந்தையின் உடல் எடை கூடாமல் மோசமான நிலைக்கு சென்றது.
இந்நிலையில், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மாதம், 1ல், குழந்தையை அனுமதித்தனர். குடல் பகுதியில் இருந்த தொற்றுக்கு சிகிச்சையளித்து, 2.500 கிலோவாக எடையை அதிகரித்தனர். பின், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் அரவிந்தன், அறுவை சிகிச்சை மருத்துவர் தீரஜ், மயக்க மருந்து நிபுணர் சாரிகா ஆகியோர் கொண்ட குழுவினர், ஐந்து நாட்களுக்கு முன், 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் குடல் ஓட்டையை சரி செய்து, வயிற்றுக்குள் வைத்து வழக்கமான வழியில் இயற்கை உபாதை வெளியேற செய்துள்ளனர்.
தற்போது குழந்தை ஆரோக்கியத்துடன் தாய்ப்பால் குடிக்கிறது. சிகிச்சையை மேற்கொண்ட, டாக்டர்கள் குழுவினர் மற்றும் டீன் ராஜா முத்தையா, மருத்துவ கண்காணிப்பாளர் கிரீஸ் ஓங்கள் ஆகியோரை, கல்லுாரி செயலர் லாசியா தம்பிதுரை
பாராட்டினார்.