/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்'
/
காவேரிப்பட்டணத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்'
ADDED : ஆக 06, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அகரம், ஆவத்துவாடி பஞ்.,களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கலெக்டர் தினேஷ் குமார் பார்வையிட்டார்.
தொடர்ந்து, 6 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், 2 பேருக்கு வாரிசு சான்றிதழ்கள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு தேசிய அடையாள அட்டை, 5 பேருக்கு ரேஷன் கார்டு, 2 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, தோட்டக்கலைத்துறை சார்பில், 10 பேருக்கு காய்கறி விதை தொகுப்புகள் என, 26 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பத்மலதா, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.