/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநில செஸ் போட்டி 2,000 பேர் பங்கேற்பு
/
மாநில செஸ் போட்டி 2,000 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 29, 2024 11:07 AM
ஓசூர்,: ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஹில்ஸ் ஓட்டலில், குணம் மருத்துவமனை மற்றும் ஓசூர் சிப்காட் அரிமா சங்கம் ஆகியவை சார்பில், பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், முதல் முறையாக மாநில அளவிலான செஸ் போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன.
குணம் மருத்துவமனை டாக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்து, போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், 9, 11, 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலுார் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் என மொத்தம், 2,000 பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற, 300 மாணவ, மாணவியருக்கு கோப்பைகள், சான்றிதழ், 12 மிதிவண்டிகள் பரிசாக வழங்கப்பட்டன. ஒரு லட்சம் ரூபாய் வரை மொத்த பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமா சங்க முன்னாள் கவர்னர் ரவிவர்மா, நிர்வாகிகள் நம்பி, ரமேஷ்பாபு, சீதாஜெயராமன், நாராயணன், பிரேம்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.