/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
/
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 08, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டி கிராமத்தில், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க, மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜீ, மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மின்சார பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, கூட்டத்தை துவக்கி வைத்தனர்.
கூட்டத்தில், எண்ணேக்கோள் திட்டத்தை விரைந்து முடித்து, 2026ம் ஆண்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட, மா விவசாயிகளின் மாந்தோட்டங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அரசு முழு மானிய திட்டத்தில் மாந்தோட்டங்களை உழவு செய்து கொடுக்க வேண்டும். விவசாயிகள் குடும்பத்தில் உள்ள, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் மாநில, மத்திய அரசுகள் கணக்கெடுத்து, அனைவருக்கும் மாதம், 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.