ADDED : மார் 06, 2024 02:35 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில மகளிர் ஹாக்கி விளையாட்டு
போட்டிகள் கடந்த, 2ல் துவங்கியது. இதில், 23 அணிகளை சேர்ந்த, 414
வீராங்கனைகள் பங்கேற்றனர். 2 நாட்கள் நடந்த லீக் போட்டியில், 8
அணிகள் தேர்வாகின. இந்த அணிகளுக்கு, நேற்று முன்தினம் கால் இறுதியும்,
நேற்று காலை, 4 அணிகளுக்கு அரை இறுதி போட்டியும், மாலை, 2 அணிகளுக்கு
இறுதி போட்டியும் நடந்தன.
இதில், ஈரோடு அணி முதலிடமும், திருச்சி
அணி, 2ம் இடம், சென்னை அணி, 3ம் இடம், சேலம் அணி, 4ம் இடமும் பெற்றன.இந்த அணிகளுக்கு, தேவராஜ் புரூட்ஸ் இயக்குனர் கவுசிக், கோப்பை வழங்கி பாராட்டினார்.
இதில்,
பரணி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சேகர், மாவட்ட விளையாட்டு அலுவலர்
ராஜகோபால், தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் (ஓய்வு) ரகுநாதன்
ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப்
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மதியழகன், மாவட்ட செயலாளர் ஞானசேகரன்
ஆகியோர் செய்திருந்தனர்.
