ADDED : நவ 15, 2026 01:15 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி கனிமவளப்பிரிவு உதவி இயக்குனர் தமிழரசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கல்லக்குறுக்கி அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், அதில், 10 யூனிட் அளவிலான கற்களை கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார்படி, மகாராஜகடை போலீசார் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
