/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.,
/
ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.,
ADDED : நவ 24, 2024 12:44 AM
ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி.,
கிருஷ்ணகிரி, நவ. 24-
உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி வந்தார். அவர், கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தை ஆய்வு செய்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், விரைவில் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்குகளை முடிக்க உத்தரவிட்டார். அதே போல, வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை மதிப்பீடு செய்து பொது ஏலத்தில் விட உத்தரவிட்டார். தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.சேலம் சரக டி.எஸ்.பி., வடிவேல், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.