/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
/
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 04, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதை பொருள் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமதி ஆகியோர் முன்
னிலை வகித்தனர். பேரணியில், 243 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இப்பேரணி பள்ளியில் துவங்கி மேல்சோமார்பேட்டை குடியிருப்பு வழியாக சென்றது. வழியில், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல், மன பாதிப்புகள், சமுதாய சீர்கேடுகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்கள் விஜய் மற்றும் வெண்ணிலா ஆகியோர்
செய்திருந்தனர்.