ADDED : ஏப் 19, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி :ஊத்தங்கரை அடுத்த சூளக்காப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அசோக், 6. பாப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த, 17 மாலை அப்பகுதியில் உள்ள நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானான். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
