ADDED : மார் 11, 2026 07:24 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் அருகே நஞ்சாபுரத்தில் உள்ள சன்பீம் லே அவுட் சத்தியா
நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 44. கூலித்தொழிலாளி; இவரது மகள்
வரலட்சுமி, 17, தனியார் கல்-லுாரியில் டிப்ளமோ இ.இ.இ., முதலாமாண்டு
படித்து வந்தார்; கடந்த, 7ம் தேதி, வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்று,
தண்ணீர் தொட்டியில் நீர் உள்ளதா என பார்த்தார்.
அப்போது,
எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி வரலட்சுமி
படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு
மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பினர். அங்கு அவர்,
நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். மத்திகிரி போலீசார்
விசாரிக்கின்றனர்.śśś
