நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த சந்திரப்பா மகன் மனோ, 17. தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 6:15 மணிக்கு, சூளகிரியில் உள்ள காமராஜ் நகர் - பஸ் ஸ்டாண்ட் சர்வீஸ் ரோட்டில், ஹோண்டா யுனிகார்ன் பைக்கில் சென்றார்.
தனியார் டிரான்ஸ்போார்ட் நிறுவனம் அருகே சென்றபோது, அப்பகுதியில் எந்த சிக்னலும் செய்யாமல் நிறுத்தியிருந்த ஈச்சர் லாரியின் பின்னால் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவன் மனோவை மீட்ட அக்கம் பக்கத்தினர், சூளகிரி அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர், மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

