ADDED : அக் 17, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணியை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணி - -அலமேலு தம்பதியின், 3வது மகன் கதிர்வேல், 10. அருணமதி அரசு நடுநிலைப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன், வீட்டருகே உள்ள வேப்பமரத்தில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடினான். அப்போது, கயிறு அவனது கழுத்தில் இறுக்கியது. அதில், சிக்கிய கதிர்வேல், மூச்சுத்திணறி மயங்கினான்.
உறவினர்கள் மாணவனை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.