ADDED : அக் 24, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த முகலுாரை சேர்ந்தவர் நஞ்சப்பா, 36, கட்டட மேஸ்திரி. இவரது மகன் அபினேஷ், 13, அப்பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 19ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, பால் காய்ச்ச காஸ் அடுப்பை பற்ற வைத்தார். தவறுதலாக அடுப்பு எரியவில்லை. இதனால், காஸ் கசிந்துள்ளது.
அதை கவனியாமல் சிறிது நேரத்திற்கு பின், பர்னரை பற்ற வைத்துபோது, அறையில் பரவியிருந்த சமையல் காஸ் தீப்பிடித்து, அபினேஷ் உடலில் தீப்பற்றியது.
உடல் கருகி ஆபத்தான நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இறந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.