ADDED : நவ 15, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வின், 19. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குமுதேப்பள்ளியில் தங்கி, தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படிக்கிறார்.
கடந்த ஆக., மாதம், 23ம் தேதி காலை, 8:00 மணிக்கு, லேப்டாப்பை தன் அறையில் வைத்து விட்டு வெளியே சென்றார்.
இரவு, 7:00 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, லேப்டாப் திருட்டு போயிருந்தது. அஸ்வின், ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எக்கண்டஹள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி செங்கதிர், 30, என்பவர் லேப்டாப்பை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், லேப்டாப்பை பறிமுதல்
செய்தனர்.
