/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவி பலாத்கார சம்பவம்: சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மா.கம்யூ., வலியுறுத்தல்

ADDED : ஆக 21, 2024 06:13 AM
கிருஷ்ணகிரி: மா.கம்யூ., கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை என்று போலி முகாம் நடத்திய சிவராமன் என்பவர், 12 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு பாலியல் சீண்டல்களை செய்ததும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிவராமன், போலியாக என்.சி.சி., ஆவணங்கள் தயாரித்து கடந்த, 3 ஆண்டுகளாக பல பள்ளி, கல்லுாரிகளில் இதேபோல் முகாம்கள் நடத்தி, மாணவியருக்கு பாலியல் சீண்டல்களை செய்தது தெரிய வந்துள்ளது. சிவராமன், அவரது கும்பலை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து, மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மேலும், தீவிரமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.