/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிமென்ட் பூச்சு உதிரும் கட்டடத்தில் மாணவர்கள்
/
சிமென்ட் பூச்சு உதிரும் கட்டடத்தில் மாணவர்கள்
ADDED : ஆக 19, 2025 03:23 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்துார் அடுத்த, பாப்பாரப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 36 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, 2 வகுப்பறை கொண்ட கட்டடம் உள்ளது. இதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கூரை சிமென்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழும் நிலையில் இருந்தது. பள்ளி நிர்வாகம் பெயர்ந்து விழும் நிலையில் இருந்த சிமென்ட் பூச்சுகளை அகற்றி விட்டு, அப்படியே அந்த கட்டட வளாகத்தினுள் மாணவ, மாணவியரை அமர வைத்து, தொடர்ந்து வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
பள்ளி வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் மாணவ, மாணவியர், சிமென்ட் பூச்சு பெயர்ந்து எப்போது விழுமோ என்ற அச்சத்திலேயே படித்து வருகின்றனர். இது, பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேதமான பள்ளி கட்டடம் குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமான பள்ளி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடத்தை கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.