கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக்கில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக்கில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 14, 2026 04:18 AM
கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுா-ரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இக்கல்லுாரியில், அமைப்-பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்-னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்-பியல், கணினி பொறியியல், கணினி சார்ந்த உற்-பத்தி தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் மற்றும் பொருட்களின் இணையம் ஆகிய பிரிவுகளுக்கு, மூன்றாண்டு கால பட்டய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாமாண்டிலும், பிளஸ் 2 அல்லது ஐ.டி.ஐ., முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டிலும் சேர்ந்து கொள்-ளலாம்.அரசு பள்ளியில் படித்து இக்கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்-திலும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்-திலும் மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை ஆகியவை பெற்று வழங்கப்படும். மாணவ, மாணவியருக்கு தனித்-தனி விடுதி வசதி உள்ளது.
இறுதியாண்டு படிக்கும் போது, பல்வேறு முன்-னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. எனவே, இதுவரை கல்லுாரிகளில் சேராத மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வந்து பாடப்பி-ரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விபரங்-களுக்கு, 79045 31623, 90803 20850, 94423 84396, 91591 29122, 97917 22281 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
