/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'லேப்டாப்' வழங்கக்கோரி மாணவ, மாணவியர் போராட்டம்
/
'லேப்டாப்' வழங்கக்கோரி மாணவ, மாணவியர் போராட்டம்
ADDED : மார் 04, 2026 08:45 AM
மொரப்பூர்::மொரப்பூரில்
உள்ள தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலை-யத்தில், ஓராண்டு கூட்டுறவு
மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பில், 575 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு விலையில்லா,
'லேப்டாப்' வழங்கி வருகிறது.
அத்திட்டத்தின் படி, தங்களுக்கு
'லேப்டாப்' வழங்கக்கோரி, நேற்று தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலைய
மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து, காலை, 10:45 மணிக்கு
ஊர்வலமாக மொரப்பூர் பஸ் ஸ்டாண்டிண்கு வந்தனர். பின், அங்கு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:
திருச்சி மற்றும் கரூரில் ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி
வகுப்பு மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு, 'லேப்டாப்' வழங்கியுள்-ளது.
குறிப்பாக, கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவ,
மாணவியருக்கு 'லேப்டாப் 'களை வழங்கி உள்ளார். தமிழக அரசின்
விலையில்லா, 'லேப்டாப்' வழங்கும் திட்-டத்தில், 'லேப்டாப்'
வழங்கக்கோரி, கலெக்டர் மற்றும் தர்மபுரி எம்.பி., மணியிடம் ஏற்கனவே
கோரிக்கை மனு அளித்-துள்ளோம். ஆனால், இதுவரை எங்களுக்கு 'லேப்டாப் '
வழங்கவில்லை. போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு 'லேப்டாப்'
வழங்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், கடந்தாண்டு
படித்த மாணவர்களுக்கு கல்வி உத-வித்தொகையாக, 14 ஆயிரம் ரூபாய்
வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டு, இதுவரை யாருக்கும் கல்வி
உதவித்தொகை வழங்-கப்படவில்லை. எனவே, எங்களுக்கு 'லேப்டாப் '
மற்றும் கல்வி உதவித் தொகையை தமிழக அரசு வழங்கக்கோரி போராட்-டத்தில்
ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரூர் டி.எஸ்.பி.,
சதீஸ்குமார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில்,
மாணவர்களின் கோரிக்கை குறித்து கலெக்டர் மற்றும் எம்.பி.,யின்
கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று
உறுதியளித்தார். இதையடுத்து, மாலை, 4:00 மணிக்கு மாணவ, மாணவியர்
போராட்டத்தை கைவிட்டனர்.

