/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குண்டும் குழியுமான சாலையால் அவதி
/
குண்டும் குழியுமான சாலையால் அவதி
ADDED : நவ 06, 2024 01:18 AM
போச்சம்பள்ளி, நவ. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்துாரிலிருந்து, சந்துார் நான்கு ரோடு சந்திப்பு வரை உள்ள, 2 கி.மீ., துாரம் குறுகலாகவும், வளைந்தும், நெளிந்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.
இந்த சாலை வழியாக சந்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் போச்சம்பள்ளி, சிப்காட், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், மத்துார் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் டூவீலர்களிலும், பஸ்களிலும் செல்கின்றனர்.
அதேபோல் சரக்கு வாகனங்கள், அதிகளவு இந்த வழியாக செல்கிறது. குண்டும், குழியுமான தார் சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தார் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.