ADDED : நவ 15, 2026 01:30 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் சரவணன், 50. பேக்கரி வைத்துள்ளார். இவர் வீட்டின் முன் கடந்த, 9ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், 26, என்பவர், கையில் அரிவாளுடன், கேட்டை உதைத்து, தகாத வார்த்தையால் திட்டி, 'உன் மகனை வெட்டி கொலை செய்து விடுவேன்' என மிரட்டினார்.
தொடர்ந்து, அரிவாளுடன் சாலையில் நின்று, தான் பெரிய ரவுடி என கூறியுள்ளார். இக்காட்சிகள் அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. சரவணன் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் லோகேைஷ நேற்று கைது செய்தனர்.
