/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்று குவாரி பள்ளத்தில் வீசிய சந்தேக கணவர் கைது
/
மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்று குவாரி பள்ளத்தில் வீசிய சந்தேக கணவர் கைது
மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்று குவாரி பள்ளத்தில் வீசிய சந்தேக கணவர் கைது
மனைவியை இரும்பு ராடால் அடித்து கொன்று குவாரி பள்ளத்தில் வீசிய சந்தேக கணவர் கைது
ADDED : மார் 17, 2024 02:51 AM
ஓசூர்:சூளகிரி அருகே, நடத் தையில் சந்தேகப்பட்டு மனை வியை கொன்று, சடலத்தை குவாரி பள்ளத்தில் வீசிய கண வரை, போலீசார் கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் மிதிலேஷ்குமார், 23; இவர் மனைவி காஜோல்குமாரி, 24;  இவர்களுக்கு, 5, 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் வந்த மிதிலேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியில் குடும்பத்துடன் வந்து தங்கி, தாசனபுரத்திலுள்ள கல் குவாரியில், டிப்பர் லாரி டிரைவராக பணியில் சேர்ந்தார்.
மனைவி காஜோல்குமாரி, பக்கத்தை வீட்டு வாலிபருடன் மொபைல்போனில் பேசியதால் அவரது நடத்தை யில் மிதிலேஷ்குமார் சந்தேகப்பட்டார். இது குறித்து நேற்று முன்தினம் இரவு தம்பதிக்குள் ஏற்ட்ட தகராறில் ஆத்திரமடைந்த மிதிலேஷ்குமார்,  மனைவியை கொல்ல  திட்டமிட்டார். அதற்காக அவரை  அனிறிரவு, 10:00 மணிக்கு டிப்பர் லாரி யில் அழைத்துக் கொண்டு, தாசன புரத்திலுள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்கு, இரும்பு கம்பியால், மனைவியின் தலையில் பலமாக அடித்து கொலை செய்த மிதிலேஷ்குமார், சடலத்தை குவாரியிலிருந்த, 300 அடி பள்ளத்தில் வீசினார்.
தொடர்ந்து மனைவியை காணவில்லை நண்பர்களிடம் நாடகமாடினார். அவர்கள் ஆலோசனை படி நேற்று காலை, சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் சென்று, மனைவியை காணவில்லை என புகார் செய்தார். முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கூறியதால், சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணைவில், மனைவியை கொன்றதை மிதிலேஷ்குமார் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். காஜோல்குமாரி சடலத்தை, ஓசூர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

