தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சுவாமி திருக்கல்யாண வைபவம்

சுவாமி திருக்கல்யாண வைபவம்

சுவாமி திருக்கல்யாண வைபவம்


ADDED : ஏப் 02, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, குன்றின் மீது அமைந்-துள்ள வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, அழகன் முருக-னுக்கு பால் அபிஷேகம் நடந்தது. ராஜா அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். அப்போது, சூரிய ஒளி கதிர்கள், அழகன் முருகன் திருமேனி மீது விழுந்துள்ளது. இதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்து, 'அரோகரோ' கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்-தனர். ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.ஓசூர் பாரதிதாசன் நகர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கு சீர்வரிசை தட்டு எடுத்து வருதல், 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு திருக்-கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி -- 2ல் அமைந்துள்ள, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு, அபிஷேக, அலங்காரம், ஆராதனை, கூட்டு வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்-குதல் ஆகியவை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, சீர்வரிசைக-ளுடன், மாலை மாற்றி, யாகம் வளர்த்து, வள்ளி, தெய்வானை-யுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us