ADDED : ஜன 31, 2026 08:37 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உறுதிமொழியை வாசிக்க, அனைத்து துறை அலுவலர்கள், உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓசூர் சப் கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
