/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டி
/
தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டி
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்-டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு நாள் விழா கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும், 9 காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
மாவட்ட சி.இ.ஓ.,வால் இறுதி செய்யப்பட்ட, 60 மாண-வர்கள் கொண்டு போட்டி நடக்கும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தலைமை ஆசிரிய-ரிடம் உரிய விண்ணப்பத்தில் பரிந்துரை பெற்று வரும், 9ம் தேதி காலை, 9:00 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து, போட்டியில் பங்கேற்-கலாம். போட்டிக்கான தலைப்புகள் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.போட்டிகளில் முதல் பரிசாக, 10,000 ரூபாய், 2ம் பரிசாக, 7,000 ரூபாய், 3ம் பரிசாக, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டி-களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்-துள்ளார்.