/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 11:56 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே முகளூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முகளூர் கூட்ரோட்டில் உள்ள தின்னுார் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் திம்மா-ரெட்டி தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தகுமார் முன்-னிலை வகித்தார். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செய-லாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் ராஜூ ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம், டாஸ்மாக் நிர்-வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் உறுதிய-ளிக்கப்பட்டது.