/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யோகா விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு
/
யோகா விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு
யோகா விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு
யோகா விழிப்புணர்வு நடைபயணம் நிறைவு செய்த ஆசிரியருக்கு பாராட்டு
ADDED : ஆக 15, 2025 02:28 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பெரியதக்கேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன், 38. யோகா ஆசிரியர். இவர், யோகா மீதுள்ள ஆர்வத்தால், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு யோகா போட்டிகளை நடத்தியுள்ளார். தற்போது, யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, கிருஷ்ணகிரியில் இருந்து துாத்துக்குடி வரை கடந்த மாதம், 23ல் நடை பயணம் மேற்கொண்டு ஆக., 1ல் நிறைவு செய்தார்.
வழியில், பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
துாய்மை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்தினார்.
மேலும், யோகா பயிற்சியையும் பல்வேறு தரப்பினருக்கு கற்றுத்தந்தார். நடைப்பயணத்தை முடித்து, கிருஷ்ணகிரி திரும்பிய யோகா ஆசிரியருக்கு, மாவட்ட மைய நுாலகத்தில் பாராட்டு விழா நடந்தது. யோகா சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன், கவுரவ தலைவர் வெங்கடேசன் மற்றும் நுாலகர்கள் சண்முகம், அசோக்குமார், மணி, ஸ்ரீ, பழனியம்மா, சந்தான லட்சுமி, முருகம்மா உள்பட பலர் பாராட்டினர்.