ADDED : செப் 07, 2026 02:01 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முழு நேர கிளை நுாலகத்தில், வாசகர் வட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
புதிய தலைவராக கருமலை தமிழாழன், துணைத்தலைவராக கோவிந்தராஜ், செயலாளராக ரேணுகா சக்திவேல், பொருளாள-ராக நாகசுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர்களாக, துரை, ஜெகநாதன், ராசு, மணிமேகலை, பவானி, ஹேமா நீலகண்டன், சங்கர், முத்துலட்சுமி, ரத்தினசாமி, சந்திரசேகர், ராமதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவ படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
