/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரியர்கள் தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்:அமைச்சர் அறிவுரை
/
ஆசிரியர்கள் தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்:அமைச்சர் அறிவுரை
ஆசிரியர்கள் தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்:அமைச்சர் அறிவுரை
ஆசிரியர்கள் தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்:அமைச்சர் அறிவுரை
ADDED : ஜூலை 01, 2025 01:46 AM
ஓமலுார், ''ஆசிரியர்கள் தங்களை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும்,'' என, அமைச்சர் மகேஷ் பேசினார்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே பூசாரிப்பட்டி தனியார் கல்லுாரியில், நேற்று மாநில அடைவு சார்ந்த மீளாய்வுக்கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் நடந்தது. மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கை கடந்த, 27ல், இணைய வழியாக மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டது. அதில், சேலம் மாவட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட, 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் மொத்த அடைவு திறன், 51.30 சதவீதமாகும். நேற்று இது குறித்து நடந்த மீளாய்வு கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், புரிந்து பயில்கின்றனரா என்பதை ஆசிரியர்கள் அவ்வப்போது கணக்கிட வேண்டும். கற்றலில் உள்ள குறைபாடுகளை களைய, ஆசிரியர்கள் தங்களை, 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். எண்ணும் எழுத்து திட்டத்தின் மூலம் விளையாட்டுடன் கூடிய கல்வியை சொல்லித்தர முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கற்றலின் விளைவு குறித்து ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டும்.
ஜூலை, 10 முதல், 10 ஆயிரம் முகாம்களை நடத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த முகாமில் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒரு ஸ்டால் அமைத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை மக்களிடத்தில் தெரிவித்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். துறை சார்பில், 56 கோடி ரூபாயில் லேப் வசதி, 150 கோடி ரூபாயில், 2,000 புதிய ஹைடெக் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுக்கு முன் பள்ளிகள் இருந்த நிலை மாறிவிட்டது. ஆசிரியர்கள் தங்களிடம் உள்ள குறைகளை களைந்து, ஏற்று கொள்ளுதல் நிலையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
விழா முடிந்து செல்லும் போது, 'கற்றல் மற்றும் தேர்ச்சி குறைந்த பகுதிகளான தர்மபுரி, கிருஷண்கிரி மாவட்டங்களில், 2,348 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்' என, அமைச்சர் தெரிவித்து சென்றார்.