/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'டெட்' தேர்வில் விலக்கு கோரி பிரதமருக்கு ஆசிரியர்கள் கடிதம்
/
'டெட்' தேர்வில் விலக்கு கோரி பிரதமருக்கு ஆசிரியர்கள் கடிதம்
'டெட்' தேர்வில் விலக்கு கோரி பிரதமருக்கு ஆசிரியர்கள் கடிதம்
'டெட்' தேர்வில் விலக்கு கோரி பிரதமருக்கு ஆசிரியர்கள் கடிதம்
ADDED : செப் 25, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி :ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வான 'டெட்' தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என செப்., 1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு தேர்வெழுத விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம், 3 லட்சத்து, 5,350 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இவர்களில் முதுநிலை ஆசிரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுபவர்கள், ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் போக, 1.45 லட்சம் அரசு ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், தகுதி தேர்வு எழுதுவது தற்போது கட்டாயம் ஆகிறது. அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயல்படுத்தும் விதமாக, செப்., 22 முதல், 25 வரை அனைத்து பள்ளிகளில் இருந்தும், பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகள் சார்பிலும், ஆசிரியர் தகுதி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட்டு, ஆசிரியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற செய்தியை கொண்ட கடிதங்களை, கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் ஆசிரியர்கள் நேற்று அனுப்பினர்.