/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டூவீலருக்கு வழி விடாத தகராறில் வாலிபர் கொலை; 3 பேர் கைது
/
டூவீலருக்கு வழி விடாத தகராறில் வாலிபர் கொலை; 3 பேர் கைது
டூவீலருக்கு வழி விடாத தகராறில் வாலிபர் கொலை; 3 பேர் கைது
டூவீலருக்கு வழி விடாத தகராறில் வாலிபர் கொலை; 3 பேர் கைது
ADDED : ஜன 16, 2024 11:38 AM
ஓசூர்: பாகலுார் அருகே, டூவீலருக்கு வழிவிடாத தகராறில், வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுாரை அடுத்த நந்திமங்கலத்தை சேர்ந்தவர் உதயகுமார், 28; அதே பகுதியில் மாட்டுத்தீவன கடை நடத்தி வந்தார். தேவிசெட்டிப்பள்ளியை சேர்ந்த இவரின் நண்பர் மஞ்சுநாத், 30; டூவீலரில் காரப்பள்ளியிலிருந்து பாகலுாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சாலை நடுவில் நடந்து சென்றுள்ளனர். மஞ்சுநாத் பலமுறை 'ஹாரன்' அடித்தும் வழிவிடவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறில், மஞ்சுநாத்தை அவர்கள் தாக்கியுள்ளனர். இதை உதயகுமாரிடம் மஞ்சுநாத் கூறியுள்ளார்.
இதையடுத்து உதயகுமார், மஞ்சுநாத்துடன் காரப்பள்ளிக்கு சென்று, வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆயுதங்களால் இருவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். கத்தியால் குத்தப்பட்டதில் உதயகுமார் சம்பவ இடத்தில் பலியானார். மஞ்சுநாத் படுகாயமடைந்தார். மஞ்சுநாத் புகார் படி, காரப்பள்ளியை சேர்ந்த பாஸ்கர், 21, நந்தீஷ், 30, விஜயகுமார், 28, ஆகியோரை, பாகலுார் போலீசார் கைது செய்தனர்.