ADDED : மே 13, 2026 04:41 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தெட்டபேளூர் கிரா-மத்தில், பழமையான கரிய லிங்கேஸ்வர சுவாமி கோவில் உள்-ளது. குரும்பர் சமூக மக்களின் மிக முக்கிய குலதெய்வ வழி-பாட்டு தலமாக திகழ்ந்து வருகிறது.
இங்கு, கடந்த, 20 ஆண்டுக-ளாக ஒரு கோவில் காளை வளர்க்கப்பட்டு வந்தது. இக்கா-ளையை, கோவிலின் காவல் தெய்வமாகவும், ஈசனின் வாகன-மான நந்தியாகவுமே அப்பகுதி மக்கள் போற்றி வந்தனர். ஊர் விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களில் இக்காளைக்குத்தான் முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், ஓசபுரம் கிராமத்தில் இருந்த இக்கோயில் காளை, வயது முதிர்வால் நேற்று உயிரிழந்தது. அதன் உடலுக்கு புனித நீராட்டப்பட்டு, மாலைகள் மற்றும் வஸ்திரங்கள் அணி-வித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்-பட்ட டிராக்டரில் காளையின் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
